ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் 3500-க்கும் அதிகமான தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்க காலவகாசம் நீட்டிப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர், சுத்தம் செய்பவர் உள்ளிட்ட 3557 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தது.

 

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் 3500-க்கும் அதிகமான தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்க காலவகாசம் நீட்டிப்பு!

இந்த நிலையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 6ம் தேதியுடன் அவகாசம் முடிவுற்ற நிலையில் மீண்டும் கால அவகாசம் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜூலை 9ம் தேதி வரையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் :

நிர்வாகம் :

சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. அந்த அறிவிப்பில் மொத்தம் 3557 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு தேதி முடிவுற்ற நிலையில் தற்போது வரும் ஜூலை 9ம் தேதி வரைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

Madras High Court வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Office Assistant -1911, Office Assistant cum Watchman - 01, Copyist Attender - 03,
Sanitary Worker - 110, Scavenger - 06, Scavenger/Sweeper - 18, Scavenger or Sanitary Worker - 01, Gardener - 28, Watchman - 496,
Night Watchman - 185, Night Watchman cum Masalchi - 108, Watchman cum Masalchi - 15, Sweeper - 189, Waterman/woman - 01, Masalchi - 485 என மொத்தம் 3557 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி
 

கல்வித் தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான கல்வித் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்.

வயது வரம்பு:

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரருக்கு 01.07.2021 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

ஊதியம் :

ஊதியம் :

சென்னை உயர் நீதிமன்றத்தின் இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய இணையதள முகவரிகள்

முக்கிய இணையதள முகவரிகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இதர தகுதிகள் : இங்கே கிளிக் செய்யவும்.

நேரடியாக விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யவும்.

கால அவகாசம் நீட்டிப்பு விபரம் : இங்கே கிளிக் செய்யவும்.

முக்கிய நாட்கள்

முக்கிய நாட்கள்

அறிவிப்பு வெளியான நாள் - 18.04.2021

இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் சமர்ப்பித்தற்கான கடைசி நாள் - 09.07.2021

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்கும் முறை :

சென்னை உயர் நீதிமன்றத்தின் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணையதளத்தின் மூலம் 09.07.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு முறை :

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் மூன்று தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதன்படி, விண்ணப்பதாரருக்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் Oral Test உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு

மேலும் விபரங்களுக்கு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mhc.tn.gov.in அல்லது https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ அல்லது https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Addendum_04062021.pdf எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras High Court Recruitment 2021: Total 3557 Post, last date extended
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X