சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Judicial Member, President மற்றும் Member பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 85 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்று, தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court)
மொத்த காலிப் பணியிடங்கள் : 85
பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:
- President - 30 பணியிடங்கள்
- Member - 55 பணியிடங்கள்
கல்வித் தகுதி :
President - மாவட்ட நீதிபதியாக அல்லது முன்னாள் அப்பணி வகித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Member - ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Judicial Member - மாவட்ட நீதிமன்றங்களில் குறைந்தது 10 ஆண்டுகள் வரையில் Presiding Officer ஆக பணியாற்றியிருக்க வேண்டும்.
மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தமிழில் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.07.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 35 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1: Judicial Member
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2: Other Posts
விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.mhc.tn.gov.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
Judicial Member விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
Other Posts விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வுக் கட்டணம் : விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mhc.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினை காணவும்.


Click it and Unblock the Notifications












