தமிழக நீதித்துறையில், முன்கொணரப்பட்ட 14 காலிப்பணியிடங்கள் உட்பட 50 மாவட்ட நீதிபதிகள்(நுழைவு நிலை) பதவிகளுக்கு, தகுதியான நபர்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நிர்வாகம் : சென்னை உயர் நீதிமன்றம்(Madras High Court)
மேலாண்மை : மாநில அரசு
காலி பணியிடம் எண்ணிக்கை: 50

பணி விவரம்
· மாவட்ட நீதிபதி (Entry Level)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 31.07.2023
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் 10, பிளஸ் 1, பிளஸ் 2 அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் / சட்டப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2009-2010 கல்வியாண்டு மற்றும் அதற்குப் பிறகு சட்டத்தில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள், இந்திய பார் கவுன்சிலால் நடத்தப்படும் அகில இந்திய பார் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வழக்குரைஞர்களை பொறுத்தமட்டில், அறிவிக்கப்பட்ட தேதியில், ஏழு ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு வழக்குரைஞர்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உதவி அரசு வழக்கறிஞர்-கிரேடு I அல்லது உதவி அரசு வழக்கறிஞர் தரம்-II, வழக்கறிஞர் மற்றும் / அல்லது உதவி அரசு வழக்கறிஞராக ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பொதுவான நிபந்தனைகள், வழிகாட்டுகள் என்னென்ன என்பது குறித்த அறிவிப்பையும் படித்து கொள்ளவும்.
ஊதியம்
மாதம் ஊதியம் குறைந்தபட்சம் ரூ.51,550ம், அதிகபட்சம் ரூ.63,070 ஆக இருக்கும். இந்த ஊதியம் தவிர்த்து, திருத்தம் செய்யப்பட்ட இதர படிகளும் வழங்கப்படும்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்பும் வழக்கறிஞர்கள் வயது 01.07.2023 அன்று 35க்கு கீழ் இருக்க வேண்டும். பட்டியல் கண்ட சாதிகள்/ பழங்குடி வகுப்பினர், இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை உண்டு. வயது வரம்பு சலுகைகள் தொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்
SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை; மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2000 என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு முறை
Ø முதல்நிலை தேர்வு (Prelims Examination), முதன்மை தேர்வு (Main Examination), வாய்மொழி தேர்வு (Viva-Voce Test) ஆகிய மூன்று நிலைகளை கொண்டது.
இதன் அடிப்படையில், தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
முதல் நிலை தேர்வில், இரண்டு தாள்கள் தேர்வு நடக்கும். மூன்று மணி நேரம் நடக்கும் இந்த தேர்வில், தலா 100 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை வினாக்கள் இடம்பெறும்.
பொது பிரிவினர் குறைந்தபட்சம் இரண்டு தாள்கள் சேர்த்து 80 மதிப்பெண்களும், 70, 60 மதிப்பெண்களும் பெற்றிருத்தல் கட்டாயம் ஆகும்.
Ø விண்ணப்பிக்க, https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Ø தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
Ø தேர்வு தேதி, வயது வரம்பில் சலுகை உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
தகுதி, ஆர்வமுள்ளவர்கள் www.tn.gov.in அல்லது https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும்.
கோரப்படும் ஆவணங்கள் என்னென்ன அளவுகளில் இருக்க வேண்டும். மாவட்ட நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விரிவான தகவல்கள் கீழே உள்ள அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
மாவட்ட நீதிபதி (நுழைவு நிலை) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகளை, அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிய....
https://www.mhc.tn.gov.in/recruitment/login
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.mhc.tn.gov.in/recruitment/docs/INSTRUCTIONS_01_2023.pdf
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.mhc.tn.gov.in/recruitment/docs/NOTIFICATION_01_2023.pdf


Click it and Unblock the Notifications












