சிவில் நீதிபதி வேலை அறிவிப்பு 2023
புதுச்சேரி நீதித்துறையில், முன்கொணரப்பட்ட 3 காலிப்பணியிடங்கள் உட்பட 19 சிவில் நீதிபதி பதவிகளுக்கு, உயர்நீதிமன்றம் அல்லது கீழமை நீதிமன்றங்களில், தற்போது வழக்காடும் வழக்குரைஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிர்வாகம் : சென்னை உயர் நீதிமன்றம்(Madras High Court)
மேலாண்மை : மாநில அரசு
காலி பணியிடம் எண்ணிக்கை: 19

பணி விவரம்
· சிவில் நீதிபதி (Civil Judge)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 01.04.2023
கல்வி தகுதி
வழக்கறிஞர்கள் அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; இரண்டாவதாக உயர்நீதிமன்றத்தில் அல்லது கீழமை நீதிமன்றங்களிலேயே குறைந்தது 3 ஆண்டுகள் வழக்குரைஞராக இருந்திருக்க வேண்டும்.
சட்ட மாணவர்களாக இருந்தால் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ரொம்ப முக்கியம்
ஆங்கிலம் எழுதவும், படிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் (அ) மலையாளம் (அ) தெலுங்கு மொழி எழுதவும், படிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
திறனறிவு தேர்வு தேர்ச்சி
பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக படிக்காத தேர்வர்கள், சிவில் நீதிபதியாக பதவியேற்ற பிறகு, தமிழ் திறனறிவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
மாதம் ஊதியம் குறைந்தபட்சம் ரூ.27,700ம், அதிகபட்சம் ரூ.44,770 ஆக இருக்கும்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்பும் வழக்கறிஞர்கள் வயது 01.07.2023 அன்று 35க்கு கீழ் இருக்க வேண்டும். பட்டியல் கண்ட சாதிகள்/ பழங்குடி வகுப்பினர், இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை உண்டு. சட்ட கல்வி மாணவர்கள் வயது 01.07.2023 அன்று 27-க்குள் இருக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்
SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை; மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2000 என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு முறை
Ø முதல்நிலை தேர்வு (Prelims Examination), முதன்மை தேர்வு (Main Examination), வாய்மொழி தேர்வு (Viva-Voce Test) ஆகிய மூன்று நிலைகளை கொண்டது. முதல்நிலை தேர்வில் கேள்விகள் Multiple Choice Questions தன்மையில் இருக்கும். முதன்மை தேர்வில் விரிவான வகையில் விடையளிக்க வேண்டும்.
Ø விண்ணப்பிக்க, https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Ø தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
Ø தமிழ் மொழி திறனறிவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
Ø தேர்வு தேதி, வயது வரம்பில் சலுகை உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பப் படிவம், சென்னை உயர்நீதிமன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி, ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 1 ஆகும்.


Click it and Unblock the Notifications












