திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தில் இஸ்ரோவின் ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் படும் திரவ உந்து எரிசக்தி நிலையங்கள் தொடர்பான வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் இந்நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்த மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இஸ்ரோ, திரவ உந்துவிசை அமைப்பு மையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : தொழில்நுட்ப உதவியாளர்
காலிப் பணியிடங்கள் : 07
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
- மெக்கானிக்கல் - 4
- எலக்ட்ரானிக்ஸ் - 03
வயது வரம்பு : 2.7.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிபளமோ முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : https://www.lpsc.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 02.07.2019
இப்பணியிடம் குறித்த மேலும் முழு விபரங்களை அறிந்து கொள்ள திருவனந்தபுரம், இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












