நாடாளுமன்றத்தில் வேலை, ஊதியம் ரூ.1.42 லட்சம்..! விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய நாடாளுமன்ற மியூசியம் சேவையில் காலியாக உள்ள உதவியாளர், பாதுகாப்பு உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற மியூசியம் சேவையில் காலியாக உள்ள உதவியாளர், பாதுகாப்பு உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. லோக்சபா செக்ரட்டேரியேட் ஆட்சேர்ப்பு பிரிவின் மூலம் இதற்கான ஆட்கள் தேர்ச செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நாடாளுமன்றத்தில் வேலை, ஊதியம் ரூ.1.42 லட்சம்..! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய நாடாளுமன்ற மியூசியம் சேவை

மேலாண்மை : லோக்சபா செக்ரட்டேரியேட் ஆட்சேர்ப்பு பிரிவு

பணிகள் :

  • கியூரேட்டோரியல் உதவியாளர்
  • பாதுகாப்பு உதவியாளர்
  • தொழில்நுட்ப உதவியாளர்

கல்வித் தகுதி:-

கியூரேட்டோரியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரலாறு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தற்கால இந்திய வரலாறு பாடம் அதில் படித்திருக்க வேண்டும். அல்லது இளநிலை வரலாறு பட்டம் அல்லது முதுநிலை மியூசியாலாஜி பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும். முதுநிலை படித்தவராக இருந்தால், 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பாதுகாப்பு உதவியாளர்:

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், வேதியியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் படித்து சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர்:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் கணினி அறிவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதோடு குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 27 வயது உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

மேற்கண்ட மூன்று பணிகளுக்குமே ஓரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில் வழங்கப்படும்.

தேர்வு முறை :

விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://loksabhadocs.nic.in அல்லது http://164.100.47.194/Loksabha/Disclaimer.aspx?linkid=3 என்னும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, வரும் டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

THE RECRUITMENT BRANCH,
LOK SABHA SECRETARIAT
ROOM NO. 521, PARLIAMENT HOUSE ANNEXE,
NEW DELHI-110001.

பாடத்திட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண : இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Lok Sabha Recruitment 2019-2020: Apply For 3 Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+