தேசிய காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) ஒரு பகுதியான ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள் உதவி மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு இளநிலை சட்டம் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆன்லைன் வழியாக இதற்கானத் தேர்வுகள் நடைபெறும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
LIC HFL உதவி மேலாளர்
எல்ஐசி-க்கு உட்பட்ட ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நாடு முழுவதும் மாநிலங்கள் வாரியாக மொத்தம் 35 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் 5 உதவி மேலாளர் பணியிடங்கள் உட்பட்டு சதீஸ்கர்-1, மத்தியப் பிரதேசம்-1. பிஹார்-1, ஓடிசா-1, அசாம்-1, மேற்கு வங்காளம்-2, உத்தரப்பிரதேசம்-4, டெல்லி-3, ராஜஸ்தான்-1, சண்டிகர்-1, கர்நாடகா-4, ஆந்திர பிரதசேம்-1, தெலங்கானா-2, கேரளா-1, குஜராத்-1, மகாராஷ்டிரா-5 என பணிகள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி மற்றும் வயது வரம்பு:
உதவி மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளநிலை சட்டப் படிப்பில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினித் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், 01.01.2019 தேதியின்படி விண்ணப்பதார் 23 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்:-
இப்பணியிடங்களுக்கு மாதம் 32,815 ரூபாய் ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் கூடுதல் படி அனைத்தையும் சேர்த்து சுமார் 56,600 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணியிடத்திற்கு சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.lichousing.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 16 ஆகும்.
தேர்வு முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். இவற்றில் ஆன்லைன் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் தவறான ஒவ்வொரு பதிலுக்கும் 0.25 நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு மையங்கள்:-
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் இதற்கானத் தேர்வுகள் நடைபெறும். மற்ற மாநிலங்களில் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான தேர்வு மைய விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.lichousing.com/downloads/Detailed Advertisement_Legal_2019.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












