LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க!

எல்ஐசி (Life Insurance Corporation of India LIC) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர், உதவி நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எல்ஐசி (Life Insurance Corporation of India LIC) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர், உதவி நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு பி.இ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க!

கீழ்காணும் வகையில் அனைத்துத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 15 மார்ச் 2020 தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

LIC உதவி பொறியாளர் பணியிட விவரம்:

LIC உதவி பொறியாளர் பணியிட விவரம்:

எல்ஐசி-யில் உதவிப் பொறியாளர் பிரிவில் மொத்தம் 50 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், சிவில் - 29, எலெக்ட்ரிக்கல் - 10, ஆர்க்கிடெக்ட் - 4, ஸ்டரக்ச்ரல் (Structrual)- 4, எலெக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / MEP இன்ஜினியர்ஸ் - 3 என ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இவற்றில், இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டு இடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

LIC உதவி நிர்வாக அலுவலர் பணி

LIC உதவி நிர்வாக அலுவலர் பணி

உதவி நிர்வாக அலுவலர் பணிக்கு மொத்தம் 168 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அன்படி, சிஏ - 40, அக்டுரியல் (Actuarial)- 30, லீகல் - 40, ராஜ்பாஷா - 8, ஐடி - 50 என பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட காலியிடங்கள் அனைத்தும் அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீடு முறைப்படி நிரப்பப்படுகிறது.

கல்வித் தகுதி:-

கல்வித் தகுதி:-

உதவிப் பொறியாளர் (சிவில், எலெக்ட்ரிக்கல், MEP இன்ஜினியர், ஐடி) அசிஸ்டெண்ட் ஆர்க்கிடெக்ட் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறைகளில் பி.இ, பி.டெக் இளநிலை பொறியாளர் பட்டம் முடித்திருக்க வேண்டும். உதவி நிர்வாக அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு துறையில் பட்டம், பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். AAO Legal பணியிடத்திற்கு சட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-

வயது வரம்பு:-

01.2.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும், எஸ்சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், ஓபிசி - 3, PwBd(Gen) - 10, PwBD (SC / ST) - 15, PwBD (OBC) - 13 ஆண்டுகள், ECO / SSCO (GEN) - 5, ECO / SSCO (SC/ST) - 10, ECO / SSCO (OBC) - 8 என வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

ஊதியம்:

மேற்கண்ட LIC உதவிப் பொறியாளர், உதவி நிர்வாக அலுவலர் பணிக்கு மாதம் ரூ.32,795 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதியம் தவிர்த்து பிற சலுகைகள், இதர படிகள் வழங்கப்படும்.

தேர்வு முறை:

தேர்வு முறை:

முதனிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதனிலைத் தேர்வு உத்தேசமாக ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறும்.

முக்கிய நாட்கள்:

முக்கிய நாட்கள்:

  • LIC வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான நாள் : 25 பிப்ரவரி 2020
  • விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 25 பிப்ரவரி 2020
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15 மார்ச் 2020
  • முதனிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 04 ஏப்ரல் 2020
  • மெயின் தேர்வு நடைபெறும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும்
  • முதனிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகும் நாள் : 27 மார்ச் 2020
  • முதனிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பெறுவதற்கான கடைசி நாள் : 4 ஏப்ரல் 2020
  • விண்ணப்பிக்கும் முறை

    விண்ணப்பிக்கும் முறை

    மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது 700 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் 85 ரூபாய் ஆகும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.licindia.in/Bottom-Links/careers என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
LIC AE & AAO 2020: Notification PDF out, Apply Online, Exam Date, details here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+