10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் வேலை- ஊதியம் எவ்வளவு தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்ற

By Saba

கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் வேலை- ஊதியம் எவ்வளவு தெரியுமா?

சென்னை உயர்நீதிமன்றம் W.P.No. 32836/2007 & 33647/2007 நாள்:28.02.2008 மற்றும் W.P.No.28941/2011 நாள்: 28.02.2012-ல் அளித்த உத்தரவின்படி அரசு ஆணைக்குட்பட்ட கல்வித்தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்றிருக்கும் இதர நபர்கள் அதற்குரிய விண்ணப்பப்படிவத்தில் சுய சான்றிடப்பட்ட உரிய சான்றுகளுடன் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த நபர்களை நேர்முக தேர்வுக்கு அனுப்புமாறு கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் விபரங்கள் இணையத்தளத்தில் "https://districts.ecourts.gov.in/tn/krishnagiri" இந்த முகவரியில் மட்டுமே அறிவிக்கப்படும்.

நிர்வாகம் : கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 105

பணியிடம் : கிருஷ்ணகிரி

வயது வரம்பு :

  • 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://districts.ecourts.gov.in/india/tn/krishnagiri/recruit

விண்ணப்பிக்க கடைசி நாள் : 8 ஜூன் 2019

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான குறிப்புகள்

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் வலது பக்கத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட தங்களது புகைப்படம் ஒட்டப்பட்டு சுய சான்றிட்டு இணைக்கப்பட்ட உரிய சான்றிதழ்களுடன் 08-06-2019 தேதி மாலை 5.00 மணிக்குள் தபால் மூலம் மட்டுமே பின்வரும் முகவரிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

முதன்மை மாவட்ட நீதிபதி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி 635 001.

பணி மற்றும் பணியிட விபரங்கள்

பணி : கணினி இயக்குபவர்
காலியிடங்கள் :
3
கல்வித் தகுதி : இளநிலை பட்டம், தட்டச்சு தேர்ச்சி
ஊதியம் : ரூ. 5200 முதல் ரூ.38400 வரையில்

பணி : ஓட்டுநர்
காலியிடங்கள் :
3
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.5200 முதல் ரூ.36300 வரையில்

பணி : முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள் :
9
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம் : ரூ.5200 முதல் ரூ.36300 வரையில்

பணி : நகல் எடுப்பவர்
காலியிடங்கள் :
12
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி, நகல் எடுப்பதில் 2 வருட முன்அனுபவம் தேவை.
ஊதியம் : ரூ.4800 முதல் ரூ.30800 வரையில்

பணி : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் :
47
கல்வித்தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம் : ரூ.4800 முதல் ரூ.29300 வரையில்

பணி : தோட்டக்காரர்
காலியிடங்கள் :
1
கல்வித்தகுதி : தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.4800 முதல் ரூ.29300 வரையில்

பணி : இரவுக்காவலர்
காலியிடங்கள் :
12
கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.4800 முதல் ரூ.29300 வரையில்

பணி : இரவுக் காவலர் மற்றும் மசால்சி
காலியிடங்கள் :
2
கல்வித்தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.4800 முதல் ரூ.29300 வரையில்

பணி : முழு நேர மசால்சி
காலியிடங்கள் :
9
கல்வித்தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.4800 முதல் ரூ.29300 வரையில்

பணி : துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மைப்படுத்துபவர்
காலியிடங்கள் :
1
கல்வித்தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.4800 முதல் ரூ.29300 வரையில்

பணி : துப்புரவு பணியாளர்
காலியிடங்கள் :
3
கல்வித்தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.4800 முதல் ரூ.29300 வரையில்

பணி : சுகாதார ஊழியர்
காலியிடங்கள் :
3
கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.4800 முதல் ரூ.29300 வரையில்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Krishnagiri District Recruitment 2019 for 105 Computer Operator, Office Assistant, Watchman & Other
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X