கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 1ஆம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்ப செயல் முறை துவங்கியுள்ளது. 1 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

யாருக்கு முன்னுரிமை
அடிக்கடி பணி மாறுதல்களுக்கு உள்ளாகும் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கு, நாடு முழுவதும் பொதுவான கல்வியை உறுதி செய்யும் வகையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடமுறையும் பயிற்று வித்தல் திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.
கேந்திரிய வித்யாலயா கல்வி நிலையங்களில், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டும் பயிற்று மொழியாக உள்ளன. இருப்பினும், கூடுதல் முயற்சியாக, 20 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விரும்பி கேட்டு கொண்டால், உள்ளூர் தாய் மொழி பயிற்றுவிக்கப்படும்.
நிதி ஒதுக்கீடு, தரமான ஆசிரியர்கள் நியமனம், நிர்வாகக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் காரணமாக, இந்தப் பள்ளிகளில் தரமான பயிற்றுவித்தல் உள்ளது என்பது அனைவராலும் நம்பப்படுகிறது.
உதாரணமாக, சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்றன. பெற்றோரே... நீங்கள் உங்கள் குழந்தையை, இந்த பள்ளிகளில் சேர்க்க விரும்பினால், உடனே விண்ணப்பிக்கலாம்.
வயது என்ன தெரியும்?
01/04/2023 அன்று விண்ணப்பதாரர் 6 வயதை கடந்திருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 1.04.2015 - 1.04.2017க்கு இடையே பிறந்திருக்க வேண்டும்.
மாற்று திறனாளி குழந்தைகள் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை விட, 2 ஆண்டுகள் சலுகை பெற தகுதியுடையவர்.
அரசுப் பணிகளில் இல்லதாவர்களும், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தாலும், தனியார் நிறுவனத்தில் பணி செய்பவராக இருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இருப்பினும், பணிமாறுதல்களுக்கு உள்ளாகும் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கான இந்த பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளதால், அவ்வகை விண்ணப்பதாரர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அதன்படி, பணிமாறுதல்களுக்கு உள்ளாகும்/ பணிமாறுதல்களுக்கு உள்ளாகாத மத்திய அரசுப் பணியாளர்கள், பணிமாறுதல்களுக்கு உள்ளாகும்/ பணிமாறுதல்களுக்கு உள்ளாகாத மத்திய பொது துறை நிறுவன பணியாளர்கள், பணிமாறுதல்களுக்கு உள்ளாகும்/ பணிமாறுதல்களுக்கு உள்ளாகாத மாநில அரசு பணியாளர்கள், பணிமாறுதல்களுக்கு உள்ளாகும்/ பணிமாறுதல்களுக்கு உள்ளாகாத மாநில பொது துறை ஊழியர்கள், மற்ற பிரிவை சார்ந்த குழந்தைகள் என்ற முன்னுரிமை அடிப்படையில் இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
ஆர்வமுள்ளவர்கள் பெற்றோர் கவனிக்க...
https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் வாயிலாக,1ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஹலோ விண்ணப்பக் கட்டணம் கிடையாதுங்க... மறக்காதீங்க... சீக்கிரம் விண்ணப்பிக்கவும்.
விரிவான தகவல்களுக்கு க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட் பெற்றோர்..!
https://kvsonlineadmission.kvs.gov.in/index.html


Click it and Unblock the Notifications












