தமிழக அரசிற்கு உட்பட்ட கன்னியாகுமரி கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 25
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- நகர கூட்டுறவு வங்கி - 2
- நகர கூட்டுறவு கடன் சங்கம் - 2
- பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் (ஏ வகை) - 4
- பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் (பி வகை) - 3
- தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் (ஏ வகை) - 9
- தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் (பி வகை) - 3
- தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் (சி வகை) - 2
- நகர கூட்டுறவு வங்கி - ரூ.11,900 முதல் ரூ.32,450 வரையில்
- நகர கூட்டுறவு கடன் சங்கம் - ரூ.18,600 முதல் ரூ.27,300 வரையில்
- பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் (ஏ வகை) - ரூ.15,000 முதல் ரூ.47,600 வரையில்
- பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் (பி வகை) - ரூ.15,000 முதல் ரூ.47,600 வரையில்
- தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் (ஏ வகை) - ரூ.16,000 முதல் ரூ.54,000 வரையில்
- தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் (பி வகை) - ரூ.12,200 முதல் ரூ.33,580 வரையில்
- தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் (சி வகை) - ரூ.10,050 முதல் ரூ.29,940 வரையில்
வயது வரம்பு:
1.1.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் அதிகபட்சமாக 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர பிரிவினர், அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.
ஊதியம்:
கல்வித் தகுதி:
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், கூட்டுறவுப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு மே 17 ஆம் தேதி நடைபெறும். தேர்வுக்கான பாடத்திட்டங்கள், தேர்வு முறை ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.kkadrb.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும். www.kkadrb.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து, ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












