மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் காலியாக உள்ள உதவி சமையலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்று குறைந்தது 5 வருடங்கள் சமையல் துறையில் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கலாக்ஷேத்ரா பவுண்டேஷன் (Kalakshetra Foundation)
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : சென்னை
பணி : உதவி சமையல்காரர்
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்று சமையல் துறையில் 5 வருடம் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.56,900
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kalakshetra.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 19.10.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Director, Kalakshetra Foundation, hiruvanmiyur, Chennai 600041
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.kalakshetra.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












