திருச்சி வருவாய் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

Posted By:

இந்தியன் கஸ்டம்ஸில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு விருப்பமுள்ளோர் பயன்படுத்தி கொள்ளவும். இந்தியன் கஸ்டம்ஸில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

விருப்பமுள்ளோர் திருச்சி வருவாய் துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

இந்தியன் கஸ்டம்ஸ் திருச்சியில் இன்ஜினியரிங் மேட் , சிமேன், ஸ்கிப்பர், கீரிஸர் , லான்ஜ் மெசின் போன்ற 16 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பிங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ பள்ளியில் எட்டாம் வகுப்பு மற்றும் 10 வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். அதிகாரபூர்வ அறிவிக்கையை படிக்கவும்.

திருச்சி வருவாய் கழகத்தில் 16 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிப்போரில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 18,000 முதல் 1,12,400 தொகை பெறலாம் அத்துடன் கிரேடு பே தொகையும் பெறலாம் .

திருச்சி வருவாய் கழகப்பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பானது 18 வயது முதல் 30வயது ஆகும்.

அதிகாரப்பூர்வ விண்ணப்பத் தளத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முறையாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகழ்களை உடன் இணைத்து சுய கையெப்பத்துடன் கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு டிசம்ப 1ஆம் தேதுக்குள் அனுப்ப வேண்டும் .

அனுப்ப வேண்டிய முகவரி :

தி ஜாயிண்ட் கமிஸனர் ஆஃப் கஸ்டம்ஸ்,
கமிஸனர் ஆஃப் கஸ்ம்ஸ் பிரிவெண்டிவ்,
நெம்பர் 1 வில்லியம்ஸ் ரோடு கண்டோன்மெண்ட் ,
திருச்சிராப்பள்ளி,
தமிழ்நாடு 620001.

திருச்சி கஸ்டம்ஸ் பணியில் வேலைவாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை கொடுத்துள்ளோம். திருச்சி அரசு வருவாய் கழகத்தில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் . 

சார்ந்த பதிவுகள் :

இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

அணு ஆற்றல்துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணபிக்கவும் !!

English summary
here article tell about job notification of tirchy revenue Department
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia