மத்திய அரசிற்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றாக புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்
பணி : உதவி பேராசிரியர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 97
ஊதியம் : மாதம் ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரையில்
கல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விதிமுறைப்படி தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
- www.jnu.ac.in என்னும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 29.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jnu.ac.in/sites/default/files/career/Advt. No. RC-59-2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












