ரூ.1.10 லட்சம் ஊதியத்தில் JIPMER பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் (JIPMER) மருத்துவ பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 58 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.10 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.1.10 லட்சம் ஊதியத்தில் JIPMER பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடங்கள் : 58

பணி : Senior Resident பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு : 31.01.2022 தேதின்படி விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.1,10,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 14.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,500
  • எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,200

தேர்வு முறை :

  • விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • கணினி வழியிலான தேர்வு 26.12.2021 அன்று நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JIPMER Recruitment 2021: Apply online for Senior Resident post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X