புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் (JIPMER) புராஜக்ட் ஆபீஸர், சீனியர் ரிசர்ச் பெல்லோ (Project Officer, Senior Research Fellow, Junior Research Fellow) ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://jipmer.edu.in/sites/default/files/Advertisement of post for VAMR Study Phase II (Amendment 5.1.2024) (1).pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.
ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்தான் (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research), தமிழில் சுருக்கமாக ஜிப்மர்(JIPMER) என்றழைக்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் புதுச்சேரியில் உள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாக இது அறியப்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்நிறுவனம், இந்திய மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்குகிறது. இந்நிறுவனம் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவப்படிப்புகளை இந்நிறுவனம் வழங்குவதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இக்கல்லூரியில் பயில்கின்றனர்.
இந்நிறுவனம் 3,000 பணியாளர்களையும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 150 இளநிலை மாணவர்களையும், 200 முதுகலை மாணவர்களையும் சேர்த்துக் கொள்கிறது. பாண்டிச்சேரி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சோ. தட்சணாமூர்த்தி முதலியார் முயற்சியால் இம்மருத்துவமனை உருவானது.

ஆண்டுதோறும் நீட் தேர்வைப் போலவே, ஜிப்மர் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிப் படிப்புகளில் சேர்வதற்கும் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வை எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1823-ல் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை, பல்கலைக்கழகம் தற்போது 200 ஆண்டுகளை நிறைவு செய்து பீடுநடை போட்டு வருகிறது.
இந்த பெருமைவாய்ந்த புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகத்தில்தான் (JIPMER) தற்போது புராஜக்ட் ஆபீஸர், சீனியர் ரிசர்ச் பெல்லோ (Project Officer, Senior Research Fellow, Junior Research Fellow) ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன.
ஜிப்மர் (JIPMER) பல்கலைக்கழகத்தில் Project Officer - 1 பணியிடம், Senior Research Fellow - 1 பணியிடம்,
Junior Research Fellow - 1 பணியிடம் ஆகியவை காலியாக உள்ளன.
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான கல்வித்தகுதி:
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு மெடிக்கல் மைக்ரோ பயாலஜி (Medical Microbiology) பாடப்பிரிவில் எம்.எஸ்சி(M.Sc) டிகிரியை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான வயது விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான சம்பள விவரம்:
இந்த ஜிப்மர் (JIPMER) பல்கலைக்கழக பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.20,000/- முதல் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக பெறுவர்.
தேர்வு செய்யும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 12.1.2024 என்ற இறுதி நாளுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.
இணையதள முகவரி:
கூகிள் ஃபார்ம் முகவரி: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeHmtSgU4I4yCOMl8Vsm7rKZxGFfFlYxiXkyr_M2sIwq__BrQ/viewform?pli=1
கூடுதல் விவரங்களுக்கு https://jipmer.edu.in/sites/default/files/Advertisement of post for VAMR Study Phase II (Amendment 5.1.2024) (1).pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












