ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஜிப்மரில் வேலை காத்திருக்கு....!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜிப்மர் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் சீனியர் கிளினிக்கல் டிரையல் கோஆர்டினேட்டர் (SENOIR CLINICAL TRIAL COORDINATOR) பணியிடங்கள் காலியாக உள்ளன. ரூ.35 ஆயிரம் ஊதியம் தரும் இந்தப் பணியிடத்துக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கூடுதல் விவரங்களுக்கு https://jipmer.edu.in/sites/default/files/Vacancy notification of Senior clinical trial coordinator.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்தான் (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research), தமிழில் சுருக்கமாக ஜிப்மர்(JIPMER) என்றழைக்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் புதுச்சேரியில் உள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாக இது அறியப்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்நிறுவனம், இந்திய மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்குகிறது. இந்நிறுவனம் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவப்படிப்புகளை இந்நிறுவனம் வழங்குவதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இக்கல்லூரியில் பயில்கின்றனர்.

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஜிப்மரில் வேலை காத்திருக்கு....!!

இந்நிறுவனம் 3,000 பணியாளர்களையும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 150 இளநிலை மாணவர்களையும், 200 முதுகலை மாணவர்களையும் சேர்த்துக் கொள்கிறது. பாண்டிச்சேரி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சோ. தட்சணாமூர்த்தி முதலியார் முயற்சியால் இம்மருத்துவமனை உருவானது.

ஆண்டுதோறும் நீட் தேர்வைப் போலவே, ஜிப்மர் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிப் படிப்புகளில் சேர்வதற்கும் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வை எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1823-ல் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை, பல்கலைக்கழகம் தற்போது 200 ஆண்டுகளை நிறைவு செய்து பீடுநடை போட்டு வருகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த ஜிப்மரில்தான் தற்போது சீனியர் கிளினிக்கல் டிரையல் கோ ஆர்டினேட்டர் (SENOIR CLINICAL TRIAL COORDINATOR) பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடைசி தேதி:

இந்த சீனியர் கிளினிக்கல் டிரையல் கோ ஆர்டினேட்டர் (SENOIR CLINICAL TRIAL COORDINATOR) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இம்மாதம் 29(29-12-2023) ஆகும்.
இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோர் மாத சம்பளமாக ரூ.35,000/- பெறுவர்.

வயதுத்தகுதி:

31-12-2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து
லைப் சயின்ஸஸ், பாராமெடிக்கல் சயின்ஸஸ், பார்ம்.டி பிரிவில் மாஸ்டர் டிகிரி (Master degree in Life Sciences/ Paramedical sciences / Pharm.D) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கோஆர்டினேட்டர் பணியிடத்துக்கான தேர்வு செயல்முறை:

ஜிப்மர் மருத்துவமனை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் வரும் 29-ம் தேதி( 29-12-2023) நடைபெற உள்ளது. நேர்காணலின்போது எழுத்து தேர்வும் நடைபெற உள்ளது.

ஜிப்மர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29-12-2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://jipmer.edu.in/sites/default/files/Vacancy notification of Senior clinical trial coordinator.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research (JIPMER)has issued the latest notification for the recruitment of 2023. Applications are invited for the post of Senior Clinical Trial Coordinator. For more details please logon into Log on to the official website www.jipmer.edu.in.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+