புதுச்சேரி ஜிப்மர் பல்கலை.யில் காத்திருக்கும் உதவிப் பேராசிரியர் வேலை...!!

புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்தான் (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research), தமிழில் சுருக்கமாக ஜிப்மர்(JIPMER) என்றழைக்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் புதுச்சேரியில் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாக இது அறியப்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்நிறுவனம், இந்திய மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்குகிறது. இந்நிறுவனம் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவப்படிப்புகளை இந்நிறுவனம் வழங்குவதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இக்கல்லூரியில் பயில்கின்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் பல்கலை.யில் காத்திருக்கும் உதவிப் பேராசிரியர் வேலை...!!

இந்நிறுவனம் 3,000 பணியாளர்களையும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 150 இளநிலை மாணவர்களையும், 200 முதுகலை மாணவர்களையும் சேர்த்துக் கொள்கிறது. பாண்டிச்சேரி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சோ. தட்சணாமூர்த்தி முதலியார் முயற்சியால் இம்மருத்துவமனை உருவானது.

1823-ல் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை, பல்கலைக்கழகம் தற்போது 200 ஆண்டுகளை நிறைவு செய்து பீடுநடை போட்டு வருகிறது.

இந்த சீர்மிகு புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) பல்கலைக்கழகத்தில்தான் தற்போது 9 உதவிப் பேராசிரியர்( Assistant Professor) பணியிடங்கள் காலியாகவுள்ளன.

உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு அரசு அல்லது எம்சிஐ (MCI) அனுமதி பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் MD, MS, MA, M.Sc, MPH, Ph.D ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 14.12.2023 அன்றைய நாளின் படி, 50 வயதுக்கு கீழுள்ள நபர்கள் தகுதியானவர்கள். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், இடபிள்யூபிடி பிரிவினருக்கு 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது லெவல் 12 படி, ரூ.1,01,500/- முதல் ரூ.1,67,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

இந்த ஜிப்மர் (JIPMER) பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்மர் விண்ணப்ப கட்டணம் யுஆர், ஓபிசி, இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு ரூ.1,500/-ம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,200/-ம் கட்டணமாக செலுத்தவேண்டும்.

இடபிள்யூபிடி பிரிவினருக்கு (EWPD) விண்ணப்ப கட்டணம் கிடையாது
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 14.12.2023 (டிசம்பர் 14) தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு https://jipmer.edu.in/sites/default/files/Detailed advertisement.pdf என்ற இணையதள லிங்க்கை தொடர்புகொண்டு அறியலாம்.

விண்ணப்பங்களை https://jipmer.edu.in/announcement/recruitment-assistant-professor-various-specialties-department-dermatopathology-jisph என்ற இணையதள லிங்க்கில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JIPMER Recruitment 2023: Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER), Puducherry has invites applicants for Assistant Professor posts. For more details can get the details in this link https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20advertisement.pdf
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+