ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் வரும் ஜனவரி 7ஆம் தேதியன்று வெளியிடப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced) என இரண்டு கட்டங்களாக இத்தேர்வுகள் நடத்தப்படும்.
அதன்படி, நடப்பு ஆண்டு ஜேஇஇ மெயின் 2021 தேர்வு 4 முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரையிலும், அதனைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மெயின் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் தற்போது 2021-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில்,
JEE Advanced 2021 தேர்வு தேதி வரும் ஜனவரி 7-ம் தேதி மாலை ஆறு மணிக்கு வெபினார் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெபினார் நேரலை நிகழ்ச்சி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களின் டிவிட்டர் தளத்தில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.