TNPSC Junior Rehabilitation Officer 2022:ஒன்லி த்ரீ டேஸ்…! இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க…!

TNPSC இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணி 2022

தமிழ்நாடு பொது சார்நிலை பணிகளில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர்(மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய, இன்னும் மூன்று நாள்கள் தான் உள்ளன. அதாவது, ஜன., 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நிர்வாகம் : தமிழ்நாடு பொது சார்நிலை பணிகள் (Tamilnadu General Subordinate Service)

மேலாண்மை : மாநில அரசு

ரூ.1.30 லட்சத்தில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் வேலை...!

பணி விவரம்

Ø இளநிலை மறுவாழ்வு அலுவலர்(Junior Rehabilitation Officer)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 7

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.1.2023(ஒன்லி த்ரீ டேஸ்)

கல்வி தகுதி

தமிழ்நாடு பொது சார்நிலை பணிகளில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் உளவியல், சமூகவியல், சமூக சேவை சார்ந்த படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 12 இன் படி, ரூ. 36,600 -ரூ. 1,30,800 வரை மாத ஊதியம் பெறுவர்.

பணி அனுபவம்

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணி செய்திருப்பது சிறந்தது.

நோட் இட் ப்ளீஸ்....!

Ø அறிவிப்பு நாள்: 09.12.2022

Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 07.1.2023

தேர்வு நாள், நேரம், பாடம்:

தாள் -1

1. உளவியல், சமூகப்பணி, சமூகவியல் (முதுகலை பட்டப்படிப்புத் தரம்)

01.04.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.

தாள் -2

பகுதி - அ

கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு (10ம் வகுப்புத் தரம்)

பகுதி -ஆ

பொது அறிவு (பொது அறிவு பட்டப்படிப்புத் தரம்)

01.04.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை நடக்கும். மொத்தம் 450 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின், தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வின் வினா தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. அதாவது தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆவார்.

தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

வயது வரம்பு

தமிழ்நாடு பொது சார்நிலை பணிகளில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர்(மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2022 அன்று 37 வயதினை பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.

தேர்வு கட்டணம்

Ø பதிவுக் கட்டணம் : ரூ.150/-

Ø தேர்வுக் கட்டணம் : ரூ 200/

மற்ற பிரிவினருக்கு அரசால் வழங்கப்பட்ட கட்டணம் செலுத்துவதில் இருந்து சலுகை உண்டு.

மறக்காதீங்க...!

Ø இணையவழி விண்ணப்பத்தை 07.1.2023 அன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்க இயலும், அதன் பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.

Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Ø நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Ø எனவே, நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் இருந்தால் விண்ணப்பிக்கும் போதே பதவிவேற்றம் செய்ய வேண்டும்.

க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

www.tnpscexams.in

https://www.tnpsc.gov.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/english/35_2022_JRO_ENG.pdf

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/tamil/35_2022_JRO_TAM.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamil Nadu Public Service Commission, also known as TNPSC, has released a notification for the post of Junior Rehabilitation Officer (State Commission for Persons with Disabilities) under Tamil Nadu General Public Works. Youths don't forget that there are only three days left to apply for this post...!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X