மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் (ITBP) காலியாக உள்ள காண்ஸ்டபில் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 65 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை (ITBP)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 65
பணி : Constable
கல்வித் தகுதி : அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மருத்துப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர் 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruitment.itbpolice.nic.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 02.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
- எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.itbpolice.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












