ISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உந்தும வளாகத்தில் காலியாக உள்ள பல்வேறு அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உந்தும வளாகத்தில் காலியாக உள்ள பல்வேறு அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

ISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இப்பணியிடங்களுக்கு ஐடிஐ, பி.இ, பி.டெக் மற்றும் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருநெல்வேலி இஸ்ரோ

திருநெல்வேலி இஸ்ரோ

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோவின் உந்தும வளாகத்தில் மன்று விதமான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 7ம் தேதியன்று வெளியான இதற்கான அறிவிப்பில் பட்டப்படிப்பு அளவிலான பயிற்சி, பொறியியல் அளவிலான டெக்னீசியின் பயிற்சி, ஐடிஐ டிரேடு அப்ரண்டிஸ் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பு அளவிலான பயிற்சி

பட்டப்படிப்பு அளவிலான பயிற்சி

பட்டப்படிப்பு அளவிலான பயிற்சிக்கு மொத்தம் 41 காலிப் பணியிடங்கள் உள்ளது. அதில், மெக்கானிக்கல்-10, எலக்ட்ரிக்கல்-5, எலக்ட்ரானிக்ஸ்-10, இன்ஸ்ட்ருமென்டேசன்-2, கெமிக்கல்-2, கம்ப்யூட்டர் சைன்ஸ்-5, சிவில்-4, நூலக அறிவியல்-3 ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட் உள்ளனர். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். நூலக அறிவியல் துறைக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், நூலக அறிவியலில் பட்டமும் பெற்றிருத்தல் அவசியம். இதற்கான நேர்காணல் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும்.

டெக்னீசியன் அப்ரண்டிஸ்

டெக்னீசியன் அப்ரண்டிஸ்

இப்பணியிடத்திற்கு மெக்கானிக்கல்-20, எலக்ட்ரிக்கல்-10, எலக்ட்ரானிக்ஸ்-15, கெமிக்கல்-5, சிவில்-9 என மொத்தம் 59 காலியிடங்கள் உள்ளது. இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட துறையில், முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதற்கான நேர்காணல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும்.

டிரேடு அப்ரண்டிஸ்

டிரேடு அப்ரண்டிஸ்

டிரேடு அப்ரண்டிஸ் பணியிடத்தில் ஃபிட்டர்-22, PASAA/COPA - 45, எலக்ட்ரீசியன்-9, வெல்டர்-10, டர்னர்-6, எலக்ட்ரானிக் மெக்கானிக் அல்லது ரேடியோ டெலிவிஷன் -5, மெஷினிஸ்ட்-2, டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்)-2, டிராப்ட்ஸ்மேன் (சிவில்)-4, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்-4, ஏசி மெக்கானிக்-4, மெக்கானிக் டிசல்-4, கா்ர்பெண்டர்-2, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்-1 என மொத்தம் 120 காலியிடங்கள் உள்ளது. இதற்கான நேர்காணல் ஜனவரி 4 ஆம் தேதியன்று நடைபெறும்.

வயது வரம்பு

வயது வரம்பு

மேற்குறிப்பிட்டு மூன்று பணியிடத்திற்குமே ஒரே விதமான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்குத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iprc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து நேரடியாகக் குறிப்பிட்ட நாளில் நேர்காணலில் பங்கேற்கலாம்.

மேலும் விபரங்களுக்கு

மேலும் விபரங்களுக்கு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iprc.gov.in என்னும் இணையதள முகவரி அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காண இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பப் படிவத்தினைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ISRO Recruitment 2019 for Apprentices, Technical Asst and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+