இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் தற்போது ஆராய்ச்சி விஞ்ஞானி, திட்ட அறிவியலாளர் மற்றும் திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 71 பணியிடங்கள் இங்கு நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 08.04.2024-ம் தேதியாகும். விவரங்கள் அறிய https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2024_March/NRSCRMT2_2024dated18_03_2024.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடலாம்.
இங்கு ரிசர்ச் சயின்ஸ்டிஸ்ட் பிரிவில் (Research Scientist) 20 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி :இந்தப் பணிக்கு கல்வித்தகுதியாக
M.Sc in Geology / Applied Geology - 3, M.E / M.Tech in Remote Sensing & GIS / Geoinformatics - 14, M.Sc Botany/ Forestry / Ecology/ Ecology and Environmental sciences - 1, M.E/M.Tech in Civil Engineering with Specialization in Water Resources/ Hydrology/ Irrigation Water Management - 2 பட்டங்கள் தேவைப்படுகின்றன.

வயதுத் தகுதி: 08.04.2024 அன்று 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 56,100 சம்பளம் வழங்கப்படும்
இதைப் போலவே, புராஜக்ட் சயின்ஸ்டிஸ்ட் -I (Project Scientist-I), புராஜக்ட் சயின்டிஸ்ட்-பி (Project Scientist-B), புராஜக்ட் சயின்ஸ்டிஸ்ட் -II (Project Scientist-II) பணியிடங்கள் காலியாக உள்ளன.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://apps.nrsc.gov.in/eRecruitment_NRSC/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : விண்ணப்பங்களை வரும் 08.04.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2024_March/NRSCRMT2_2024dated18_03_2024.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடலாம்.


Click it and Unblock the Notifications












