இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் (IRFC) காலியாக உள்ள இந்தி மொழிப்பெயர்ப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன் (IRFC)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 04
பணி : Hindi Translator (NE 5) மற்றும் Assistant (Finance, Administration) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி :
Hindi Translator (NE5) - இந்தி, ஆங்கிலம் பாடங்களை முதன்மையாக கொண்டு முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant (Finance) (NE5) - Commerce stream பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant (Administration) (NE5) - பணிக்கு தொடர்புடைய பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர் 2 முதல் 5 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.21,000 முதல் ரூ.74,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://irfc.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












