ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் இந்திய ரயில்வேத் துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ரயில்வேத் துறையின் (IRCTC) உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள Joint General Manager பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2.20 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சிவில் பொறியியல் துறையில் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் இந்திய ரயில்வேத் துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Joint General Manager

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சிவில் பொறியியல் துறையில் 10 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், கட்டிட பணிகளில் நல்ல முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,600 முதல் அதிகபட்சம் ரூ.2,20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின்றி Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.irctc.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IRCTC Recruitment 2021: Apply for Joint General Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X