ஐஆர்சிடிசி நிறுவனத்தில்பொது மேலாளர் வேலை தயார்...!!!

ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனத்தில் இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர் (Joint General Manager / Deputy General Manager) பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.கூடுதல் தகவல்களுக்கு https://www.irctc.com/assets/images/VN 40 2023 JGM DGM RNP DNR ABH28-12-2023.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

ஐஆர்சிடிசி (IRCTC) என்றழைக்கப்படும் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமாக தொடர்வண்டிப் பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணையவழி பயணச்சீட்டுப் பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது.

ஐஆர்சிடிசி நிறுவனத்தில்பொது மேலாளர் வேலை தயார்...!!!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.

இந்த நிறுவனம் இந்தியா முழுமையும் தொடர்வண்டிகளிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் பயணிகளுக்கான உணவு வழங்கும் பொறுப்பு ஏற்றுள்ளது. தொடர்வண்டி செல்லும் தொலைவு மற்றும் சராசரி பயணிகள் எண்ணிக்கை இவற்றைக் கொண்டு ரயில்வே நிறுவனம் ரயில் வண்டிகளில் சமையலகப் பெட்டிகளை இணைக்கிறது. சமையலகப் பெட்டிகள் இணைக்கப்படாத வண்டிகளுக்கு வழியிலுள்ள தொடர்வண்டி நிலையங்களிலிருந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஐஆர்சிடிசி இந்திய ரயில்வேயின் செயல்திறனை கூட்டும்விதமாக இந்தச் சேவையில் புகழ்பெற்றுள்ளது. பயணச்சீட்டு பதிவு செய்ய தொடர்வண்டி போல நீண்ட வரிசைகளில் நின்ற காலத்தினை மாற்றி எங்கிருந்தும் இணையவழியே பதிவு செய்யும் சிக்கலற்ற செய்முறையை அறிமுகப்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களில் புரட்சி செய்துள்ளது. இணையம் மட்டுமன்றி நகர்பேசிகளில் ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் குறுஞ் செய்திகள் மூலமாகவும் பதிவு செய்ய இயலும். பதிவு செய்வதுடன் பயணச்சீட்டு பதிவை ரத்தாக்கவும் மாற்றவும் இணையவழியே இயலும். இ-பயணச்சீட்டு போன்றே ஐ-பயணச்சீட்டையும் வழங்குகிறது.

-பயணசீட்டு பயணியே தனது கணினியில் அச்சிட இயலும்; ஐ-பயணச்சீட்டில் இணையவழி பதிவுக்குப் பின்னர் வழமையான பயணச்சீட்டு அஞ்சல் வழியே அனுப்பப்படும். காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணச்சீட்டுகளின் பிஎன்ஆர் எண் வழியே தற்போதைய நிலை அறியும் சேவையும் வழங்கப்படுகிறது.

இந்த பெருமைமிகு ஐஆர்சிடிசி நிறுவனத்தில் தான் தற்போது இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர் (Joint General Manager / Deputy General Manager) பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது இங்கு இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர் (Joint General Manager / Deputy General Manager) பணியிடங்கள் 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர் (Joint General Manager / Deputy General Manager) பணியிடங்களுக்கான தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering, Electrical Engineering) பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருத்தல் அவசியம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே நிறுவனங்களில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் (Mechanical Engineering, Electrical Engineering) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர் (Joint General Manager / Deputy General Manager) பணியிடங்களுக்கான வயது வரம்பு:

இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர் (Joint General Manager / Deputy General Manager) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இந்த IRCTC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பேரன்ட் பே பிளஸ் டெபுடேஷன் அலவன்ஸ் (Parent Pay Plus Deputation Allowance) விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டெபுடேஷன் (Deputation) முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர் (Joint General Manager / Deputy General Manager) பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (29.01.2024) அனுப்ப வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு https://www.irctc.com/assets/images/VN 40 2023 JGM DGM RNP DNR ABH28-12-2023.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Jobs For JGM, DGM Vacancies Indian Railway Catering And Tourism Corporation Are Invited To IRCTC Application Form For The Recruitment of JGM, DGM Posts. Therefore, the Candidates must submit their respective Applications as per the Standing Instructions prescribed in the Appended IRCTC Recruitment 2023 Official Vacancy Circular.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+