இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பொறியாளர், அதிகாரி, உதவிப் பொறியாளர்
ஊதியம் : ரூ.50,000
கல்வித் தகுதி :
பொறியியல் துறையில் கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 26 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி : உதவி அதிகாரி
கல்வித் தகுதி : CA Intermediate, CMA Intermediate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : உதவி அதிகாரி பணிக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.40,000
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iocl.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (நாளை கடைசி நாள்)
தேர்வு முறை : கேட் 2020, GD. GT மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iocl.com என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications












