இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியியல் உதவியாளர், செவிலியர் உதவியாளர், Junior Material Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 514 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் (IOCL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Junior Engineering Assistant, Junior Material Assistant, Junior Quality Control Analyst மற்றும் Junior Nursing Assistant உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 514
கல்வித் தகுதி :
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி பட்டம்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் குறைந்தது ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- 30.09.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.1,05,000 மாதம்
அதிகாரப்புர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://iocl.com/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : https://10.18.72.19/iocrefrecruit/main_special_sep21.aspx
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் - ரூ.150
- எஸ்.சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, தகுதி, உடற் தகுதித் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு தேதி : எழுத்துத் தேர்வு 24.10.2021 தேதியன்று நடைபெறும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://iocl.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications












