இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Quality Controller பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேதியியல், கணிதம் உள்ளிட்ட துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Junior Quality Controller
கல்வித் தகுதி :
B.Sc Chemistry, B.Sc Mathematics, B.Sc Physics, B.Sc Industrial Chemistry
வயது வரம்பு :
- மேற்கண்ட பணியிடங்களுக்கு 26 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iocl.com என்ற இணையதளம் மூலம் 28.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.150
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iocl.com என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.