நீங்க பொறியியல் பட்டதாரியா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வியக்கவைக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 4ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நீங்க பொறியியல் பட்டதாரியா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வியக்கவைக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிட்டு

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடம் : 40

காலிப் பணியிட விபரம்:-

  • இளநிலை பொறியியல் உதவியாளர் : 18
  • தொழில்நுட்ப உதவியாளர் : 18
  • தரக் கட்டுப்பாட்டு அலுவலர் : 03
  • இளநிலை பொருள் உதவியாளர் : 01

வயது வரம்பு :-

இளநிலை பொறியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர், இளநிலை மெட்டீரியல் மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 2019 ஜனவரி 31ம் தேதியின் அடிப்படையில் 18 வயது நிரப்பி 26 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

எஸ்.சி, எஸ்டி மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி:-

இளநிலை பொறியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர், இளநிலை மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட ஒவ்வொரு பணியிடத்திற்கும் கல்வித் தகுதி மாறுபடும்.

இளநிலை பொறியியல் உதவியாளர் (உற்பத்தி):-

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர் சுத்திகரிப்பு, பெட்ரோலிய கெமிக்கல் / இரசாயன பொறியியல் உள்ளிட்ட துறையில் 3 வருட டிப்ளமோ படிப்பு அல்லது கணிதம் / இயற்பியல் / வேதியியல் / தொழிற்துறை வேதியியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பி.எஸ்சி பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்.

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (பி அண்டு யு - பாய்லர்):-

கணிதம் / இயற்பியல் / வேதியியல் / தொழிற்துறை வேதியியல் துறையில் மூன்று வருட பி.எஸ்சி படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு கிரேடு - IV-யின் படி ரூ.11,900 முதல் ரூ.32,000 வரையில் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

இளநிலை பொறியாளர் மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்:-

இளநிலை பொறியாளர் மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் இயந்திர பொறியியல், இன்ஸ்ருமன்டேஷன், இன்ஸ்ருமன்டேஷன் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ருமன்டேஷன் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங் துறை பயின்றிருக்க வேண்டும். மேலும், 10 அல்லது 12 வது தேர்ச்சி பெற்று ஐடிஐ துறையில் 2 வருட பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :-

இப்பணியிடத்திற்கு ரூ.11,900 முதல் ரூ.32,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

இளநிலை தரக்கட்டுப்பாட்டு அலுவலர்:-

கணிதம் / இயற்பியல் / வேதியியல் / தொழிற்துறை வேதியியல் துறையில் பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு ரூ.11,900 முதல் ரூ.32,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை :-

இளநிலை பொறியாளர் உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர், இளநிலை மெட்டீரியல் உதவியாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு மற்றும் தகுதி, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி உள்ளிட்ட அடிப்படையில் கீழ் தேர்வு முறை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:-

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்தியன் ஆயில் காப்பரேஷன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்

தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் : இங்கே கிளிக் செய்யவும்

காலிப் பணியிடம் குறித்த முழு அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 பிப்ரவரி 04

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IOCL Recruitment 2019 For Junior Engineering/Technical Assistants In Multiple Trades
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+