ஐஓசிஎல் என்று அழைக்கப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் அப்ரென்டிஸ் (Apprentices) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு https://plapps.indianoilpipelines.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்த பெருமைவாய்ந்த ஐஓசிஎல் நிறுவனத்தில்தான் தற்போது அப்ரென்டிஸ் (Apprentices) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஓசிஎல் (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentices பிரிவின் கீழ் வரும் Technician Apprentices, Trade Apprentices, Data Entry Operator, Domestic Data Entry Operator ஆகிய பணிகளுக்கென மொத்தமாக 473 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அப்ரென்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
Technician Apprentices - ITI / Diploma
Trade Apprentices - Bachelor's Degree
Data Entry Operator - 12ம் வகுப்பு
Domestic Data Entry Operator - 12ம் வகுப்பு
அப்ரென்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
12.01.2024 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 18 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
அப்ரென்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கான ஊக்கத்தொகை:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Apprenticeship விதிமுறைப்படி மாத ஊக்கத்தொகை பெறுவார்கள்.
தேர்வு முறை:
அப்ரென்டிஸ் (Apprentices) பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
அப்ரென்டிஸ் (Apprentices) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.01.2024 அன்று முதல் 01.02.2024 அன்று வரை https://plapps.indianoilpipelines.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி:கூடுதல் தகவல்களுக்கு https://plapps.indianoilpipelines.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
விளம்பர டவுன்லோடு:பணியிடம் தொடர்பான விளம்பரத்தை டவுன்லோடு செய்ய https://iocl.com/admin/img/Apprenticeships/Files/fc443547757e4e70a59c9a7ee22c5025.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.


Click it and Unblock the Notifications












