IOCL Apprentice Training Recruitment 2023: ஐ.ஓ.சி.எல்., கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் பணி...!

ஐ.ஓ.சி.எல்., என்று அழைக்கப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில், மெக்கானிக்கல், மெமிக்கல், எலெக்ட்ரிக்கல், பிட்டர், பாய்லர், கணக்காணர், டேட்டா என்ட்ரி உள்ளிட்ட 11 வகையான பணி நிலையில் உள்ள வர்த்தகம்(Trade Apprentice) மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்களை (Technical Apprentice) ஈடுபடுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு, நவம்பர் 21 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

நிர்வாகம் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம் :

Trade Apprentice

Technician Apprentice

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - 1720

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி -20.11.2023

ஐஓசிஎல் பணி வாய்ப்பை நழுவ விடாதீர்கள்...!

கல்வி தகுதி

காலியாக உள்ள 1,720 பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12ம் வகுப்பு, ITI, Diploma, B.Sc., கணக்கு, இயற்பியல், வேதியியல், B.A., B.Com, என, பணிக்கு ஏற்றவாறு ஏதேனும் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

'செக்ரட்டேரியல் அஸ்சிஸ்டண்ட்' பணிக்கு, பி.ஏ/பி.எஸ்.சி/பி.காம் ஆகிய பிரிவுகளில் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்கவுண்ட் பணிக்கு பிகாம் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

துறை சார்ந்த படிப்புகள் கேட்கப்பட்டுள்ளன. கல்வி தகுதி, பணியிடங்கள் குறித்த முழு விவரத்தை கீழே கொடுக்கப்பட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பானையை பார்வையிடவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 18; அதிகபட்ச வயது 24 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வயது வரம்பில் தளர்வு, உரிமை கோருபவர்கள், அதற்குரிய விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம்

தகுதி, திறன் அடிப்படையில், தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வர்கள் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக, 20.11.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

பயிற்சி காலம்

தொழில்நுட்ப பயிற்சியாளர் பாய்லர்(மெக்கானிக்கல்) பணிக்கு 24 மாதங்கள்; அலுவலக உதவியாளர் (Secretarial Assistant), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (திறன் சான்றிதழ் வைத்திருப்பவர்கள்) பணிக்கு 15 மாதங்கள்; இதர பணிகளுக்கு 12 மாதங்கள்.

எங்கெங்கு காலிப்பணியிடம்

ஐ.ஓ.சி.எல்., நிறுவனத்தின் கீழ் இயங்கும் குஜராத், மதுரா, குவஹாத்தி, பாரதீப், பானிபட் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது.

நோட் இட் ப்ளீஸ்...!

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: அக்டோபர் 21, 2023

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : நவம்பர், 20, 2023 மாலை 5 மணி வரை.

எழுத்துத் தேர்வுக்கான தற்காலிகத் தேதி டிசம்பர் 3 மற்றும் முடிவுகள் டிசம்பர் 13 அன்று வெளியிடப்படும்.

ஆவணங்கள் சரிபார்ப்பு டிசம்பர் 18 முதல் 26 வரை நடைபெறும்.

தேர்வுக்கான அனுமதி கடிதத்தை நவம்பர் 27 முதல் டிசம்பர் 2க்கு இடைப்பட்ட காலத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வயது வரம்பு உள்ளிட்ட இன்ன பிற விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ள கீழே கிளிக் செய்யவும்...!

https://www.iocl.com/

https://iocl.com/apprenticeships

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Oil Corporation Limited, popularly known as IOCL, has issued a notification to fill up 1,720 Apprentice vacancies in the Trade and Technical category in Oil Refineries across the country. For these assignments, November 20 is the last date.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+