இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் வேலை தயார்...!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் வேலைக்கான ஆட்கள் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1YiduPEInWpWSFU69EL63wYDpgM33doFO/view?pli=1 என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து காணலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது நாட்டிலுள்ள ஒரு மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் தலைநகர் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். நரேந்திரா பணியாற்றி வருகிறார்.

எம். சிடி. எம். சிதம்பரம் செட்டியாரால், 1937-ம் ஆண்டில் அந்நியச் செலாவணி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் காரைக்குடி, மதராஸ் (தற்போது சென்னை) ரங்கூன் ஆகிய மூன்று இடங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டன. விரைவில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் கிளைகள் உருவாயின.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் வேலை தயார்...!

முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலங்களில் வெளிநாட்டு வணிகம் செய்த நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கு வெளியில் இவ்வங்கிக்கு அதிகமான கிளைகள் இருந்தன. தற்போது நாடு முழுவதும் ஏராளமான கிளைகளைக் கொண்டு மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது செயல்பட்டு வருகிறது.

இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்தான் தற்போது நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 25.04.2024-ம் தேதியாகும்.

நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும்

நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணியிடங்களுக்கான வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்வாளர்கள் காணலாம்.
நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணியிடங்களுக்கான தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.04.2024 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1YiduPEInWpWSFU69EL63wYDpgM33doFO/view?pli=1 என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Overseas Bank Officials are recently published a job notification to fill up Various Posts through Offline mode. All the eligible aspirants can check the IOB career official website i.e., iob.in recruitment 2024. The last date to Apply Offline on or before 25-Apr-2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+