ஐஓபி வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை...உடனே அப்ளை பண்ணுங்க....!!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB Bank) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், அட்டெண்டர் (Office Assistant, Attender) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு https://www.iob.in/upload/CEDocuments/iobAdvertisement_Office_Assistant_And_Attender_28122023.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக எம். நரேந்திரா உள்ளார்.

எம். சிடி. எம். சிதம்பரம் செட்டியார் 1937 ஆம் ஆண்டில் அந்நியச் செலாவணி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் காரைக்குடி, மதராசு, இரங்கூன் ஆகிய மூன்று இடங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளைத் துவங்கினார். விரைவில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் கிளைகள் உருவாயின. முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலங்களில் வெளிநாட்டு வணிகம் செய்த நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கு வெளியில் இவ்வங்கிக்கு அதிகமான கிளைகள் இருந்தன.

ஐஓபி வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை...உடனே அப்ளை பண்ணுங்க....!!!

இந்த பெருமைமிகு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்தான் தற்போது அலுவலக உதவியாளர், அட்டெண்டர் (Office Assistant, Attender) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB Bank) தற்போது Office Assistant 2 பணியிடங்கள், Attender - 1 பணியிடம்
என மொத்தம் 3 இடங்கள் காலியாக உள்லன.

அலுவலக உதவியாளர், அட்டெண்டர் (Office Assistant, Attender) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும். Office Assistant - Graduate Degree, Attender - 10ம் வகுப்பு படித்தவராக இருத்தல் வேண்டும்.

அலுவலக உதவியாளர், அட்டெண்டர் (Office Assistant, Attender) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 22 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர், அட்டெண்டர் (Office Assistant, Attender) பணியிடங்களுக்கான ஊதியம்:
Office Assistant பணிக்கு ரூ.12,000/- என்றும், Attender பணிக்கு ரூ.8,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு(Written Test மற்றும் Interview) ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர், அட்டெண்டர் (Office Assistant, Attender) பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம்:
அலுவலக உதவியாளர், அட்டெண்டர் (Office Assistant, Attender) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ரூ.200/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 12.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

இணையதள முகவரி:

கூடுதல் தகவல்களுக்கு https://www.iob.in/upload/CEDocuments/iobAdvertisement_Office_Assistant_And_Attender_28122023.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

விண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய https://www.iob.in/upload/CEDocuments/iobApplication_Form_Office_Assistant_And_Attender_28122023.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Overseas Bank is inviting candidates to fill up the post of Office Assistant and Attender. As given in the official notification of Indian Overseas Bank Recruitment 2023, there are only 03 vacancies for the given post. Interested applicants should duly fill out the application form in support of documents.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+