இண்டிகோ விமானச் சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் (Assistant Manager - Leadership & Development) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு தற்போது வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த சிறப்பான பணியிடத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பம், வயதுச்சலுகை போன்ற விவரங்களை https://jobs.goindigo.in/job/Gurgaon-Assistant-Manager-Leadership-&-Development-HR/19258744/ என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
இன்டிகோ ஏர்லைன்ஸ் (IndiGo), இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில் உள்ள குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை நாடு முழுவதும் இயக்குகிறது. இந்தியாவின் குறைந்த கட்டண விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று.
இந்தியாவிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2014-ம் ஆண்டு மே மாதத்தின் படி, இதன் சந்தைப் பங்கீடு 31.7 சதவீதம் ஆகும். விரைவாக வளர்ந்து வரும் உலகிலுள்ள மிகக்குறைந்த விமானசேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 79 புதிய ஏர்பஸ் 320 ரக விமானக் குழுக்களின் உதவியுடன் இந்நிறுவனம் நாள்தோறும் 516 தினசரி விமானங்களை இயக்கி வருகிறது. இதன் மூலம் 36 இலக்குகளை, நகரங்களை பயணிகள் அடைய இயலும்.
இன்டிகோ நிறுவனமானது, ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்க்வால் என்பவர்களால் 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது.

இன்டிகோவின் உள்ளூர் சேவைகளாக மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற 38 இந்திய நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் துபாய், சிங்கப்பூர், மஸ்கட், பாங்காக் மற்றும் காத்மாண்டு என 5 வெளிநாட்டு நகரங்களுக்கு தினமும் 633 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. தற்போது இந்த நிறுவனம் ஏர்பஸ் ஏ 320 ரகத்தை சேர்ந்த 96 விமானங்களை இயக்கி வருகிறது.
2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், சர்வதேச விமானங்களை இயக்கும் வாய்ப்பினை இந்நிறுவனம் பெற்றது. தொடர்ந்த ஐந்தாண்டு காலச் சேவையினால் இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் முதல் சர்வதேச விமானமாக புது டெல்லியிருந்து துபாய்க்கு 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி விமானம் அனுப்பப்பட்டது. அதனையடுத்த சில வாரங்களில் இந்தச் சேவை நியூடெல்லியில் இருந்தும் மும்பையில் இருந்தும், பாங்காக், சிங்கப்பூர், மஸ்கட், காத்மாண்ட் எனப் பல இடங்களுக்கும் விரிவடைந்தது.
இந்த சிறப்புவாய்ந்த இண்டிகோ விமானச் சேவை நிறுவனத்தில்தான் தற்போது உதவி மேலாளர்Assistant Manager - Leadership & Development) பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
உதவி மேலாளர்Assistant Manager - Leadership & Development) பணியிடத்துக்கான கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எச்ஆர் பிரிவில் பட்டப்படிப்பு, அமைப்பு வளர்ச்சி அல்லது சைக்காலஜி, திட்ட மேலாண்மை பிரிவில் (Bachelor's degree / master's degree in HR, Talent/Organizational Development or Psychology, Project management) பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் முறையே சரளமான பேச தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
உதவி மேலாளர்Assistant Manager - Leadership & Development) பணியிடத்துக்கான தேர்வு செயல்முறை:
இந்தப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
உதவி மேலாளர்Assistant Manager - Leadership & Development) பணியிடத்துக்கான விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பங்களை அனுப்பலாம்.
விண்ணப்பம், வயதுச்சலுகை போன்ற விவரங்களை https://jobs.goindigo.in/job/Gurgaon-Assistant-Manager-Leadership-&-Development-HR/19258744/ என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












