இந்திய அஞ்சல் துறைக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் Mail Motor Service துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Mail Motor Service
மேலாண்மை : இந்திய அஞ்சல் துறை (Indian Post)
மொத்த காலிப் பணியிடங்கள் : 09
பணி : Staff Car Drivers
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
- 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, Dispatch Rider தகுதியில் பணிபுரிந்தவராகவும், முன் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
- இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் Motor mechanism பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.24,500/- (Level 2 7th CPC Matrix) வரையில் ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 10.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indiapost.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












