இந்திய கடற்படையில் காலியாக உள்ள Trades Mate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1159 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.57 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : இந்திய கடற்படை
பணி : Trades Mate
மொத்த காலிப் பணியிடங்கள் : 1159
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் 07.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் இராணுவத்தினர், பெண் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
- இதர விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://www.joinindiannavy.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.