12-வது தேர்ச்சியா? கடற்படையில் மாலுமி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

By Saba

இந்திய கடற்படையில் செய்லர் (எஸ்.எஸ்.ஆர். - பிப்ரவரி 2020) என்னும் பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 2200 பேரும், செய்லர் (ஏ.ஏ. - பிப்ரவரி 2020) என்ற பயிற்சிப் பிரிவில் 500 பேரும் என 2700 பயிற்சியுடன் கூடிய மாலுமி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். திருமணமாகாத இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12-வது தேர்ச்சியா? கடற்படையில் மாலுமி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

மேலாண்மை : இந்திய கடற்படை

வயது வரம்பு :

  • 01.02.2000 மற்றும் 31.01.2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
  • இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கல்வித் தகுதி : கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் 12-வது அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடலுறுதி திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

பயிற்சிக் காலம் : 22 வாரம்

உடல் தகுதி :

  • விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
  • மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடனும், கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் பார்வைத்திறன் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10.7.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Navy Recruitment 2019 for 2700 Sailor Posts, Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X