10-வது தேர்ச்சியா? ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் இந்திய ராணுவ கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

இந்திய ராணுவ கல்லூரியில் காலியாக உள்ள கிளார்க், ஓட்டுநர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.81 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
10-வது தேர்ச்சியா? ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் இந்திய ராணுவ கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : இந்திய ராணுவ கல்லூரி (Indian Military College)

மேலாண்மை : மத்திய அரசு

பதவி : Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant

மொத்த காலிப் பணியிடங்கள் : 31

கல்வித் தகுதி :

  • தட்டச்சர் மற்றும் ஆய்வக உதவியாளர் - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lower Division Clerk - 12-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 35 WPM திறன் படைத்திருக்க வேண்டும்.
  • Multi-Tasking Staff, Cook மற்றும் Safaiwala - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Computer Operator - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று DCA முடித்திருக்க வேண்டும்.
  • Civilian Motor Driver - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று Heavy License பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Fatigueman - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : 18,000 முதல் அதிகபட்சம் ரூ.81,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 26.07.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Presiding Officer, Scrutiny Cell, Cipher Wg, Military College of Telecommunication Engineering, Mhow (MP) 453 441

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.50

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.davp.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
indian military college recruitment 2021: Apply For Clerk, MTS, Driver and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X