இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு joinindiancoastguard.cdac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
இந்தச் சிறப்புவாய்ந்த இந்திய கடலோர காவல்படையில் தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய கடலோர காவல்படையில் தற்போது நேவிக் (ஜெனரல் டியூட்டி) பிரிவில் 261 இடங்கள் உள்ளன. இதில் மண்டலம் வாரியாக வடக்கு 79, மேற்கு 66, வடகிழக்கு 68, கிழக்கு 33, வடமேற்கு 12, அந்தமான் நிகோபர் 3 உள்ளன. கிழக்கு மண்டலத்தில் ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி உள்ளன.
இந்திய கடலோர காவல்படைப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல் பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

இந்திய கடலோர காவல்படைப் பணியிடங்களுக்கான வயது விவரம்:
18 - 22 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இந்திய கடலோர காவல்படைப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்திய கடலோர காவல்படைப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இந்திய கடலோர காவல்படைப் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கடைசிநாள்:
இந்திய கடலோர காவல்படைப் பணியிடங்களுக்கு வரும் 27.2.2024-ம் தேதிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு joinindiancoastguard.cdac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












