இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள நேவிக் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச்சீட்டைடினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள நேவிக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணியிடங்களுக்கான தேர்வு வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் மே 10ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இந்திய கடலோர காவல்படையின் http://joinindiancoastguard.gov.in/அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் அடுத்தகட்டமாக உடற்தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இரண்டு நாட்கள் நடக்கும் உடற்திறன் தேர்வில், ஓடுதல், கயிறு ஏறுதல், தடை தாண்டுதல், புஷ்அப் எடுத்தல் என அனைத்தும் அடங்கும்.


Click it and Unblock the Notifications












