மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய சுரங்க பணியகத்தில் காலியாக உள்ள Chief Chemist பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2.15 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய சுரங்க பணியகம் (Indian Bureau of Mines)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : Chief Chemist
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், தாதுக்கள் மற்றும் தாதுக்களின் இரசாயன பகுப்பாய்வில் அல்லது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் அல்லது தொடர்புடைய துறையில் ஆராய்ச்சி ஆய்வகமாக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : விண்ணப்பம் வெளியாகி 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் பணிநியமன நடைமுறையின்படி தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ibm.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












