எம்பிஏ பட்டப்படிப்பு படித்தவர்களுக்காக இந்தியன் வங்கியில் (Indian Bank) தற்போது ஆலோசகர் (Consultant) பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.indianbank.in/wp-content/uploads/2023/12/Detailed-Advertisement_LD.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்தியன் வங்கி என்பது இந்தியாவில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும், இது 1907-ல் நிறுவப்பட்டது மற்றும் சென்னையில் தலைமையகம் உள்ளது. இது 41,645 ஊழியர்களுடன் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும், 4,929 ஏடிஎம்கள் மற்றும் பண வைப்பு இயந்திரங்களுடன் 5,814 கிளைகளுக்கும் சேவை செய்கிறது.

மார்ச் 31, 2023 நிலவரப்படி வங்கியின் மொத்த வணிகம் ₹1,094,752 கோடியை (அமெரிக்க டாலர்களில் 140 பில்லியன்) தொட்டுள்ளது. வங்கியின் தகவல் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு செயல்முறைகள் ISO27001:2013 தரநிலையை பூர்த்தி செய்ய சான்றளிக்க பட்டுள்ளன. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு நாணய வங்கி கிளைகள் உட்பட கொழும்பு மற்றும் சிங்கப்பூரில் வெளிநாட்டுக் கிளைகளைக் கொண்டுள்ளது.
இது 75 நாடுகளில் 227 வெளிநாட்டு வங்கிகளைக் கொண்டுள்ளது.
1969ஆம் ஆண்டு முதல், இந்திய அரசுக்கு சொந்தமானது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 30 ஆகஸ்ட் 2019 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, அலகாபாத் வங்கி 1 ஏப்ரல் 2020 முதல் இணைக்கப்பட்டது, இந்தியன் வங்கி இப்போது நாட்டின் ஏழாவது பெரிய வங்கியாக மாறியுள்ளது. ஏப்ரல் 1, 2020 அன்று இந்தியன் வங்கியும் அலகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டன.
நாட்டிலேயே மிகப் பழமையான கூட்டுப் வங்கியான அலகாபாத் வங்கி 1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி அலகாபாத்தில், ஐரோப்பியர்களின் குழுவால் நிறுவப்பட்டது, ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்கள், வர்த்தகம் மற்றும் வங்கியியல் ஆகியவை இந்தியாவில் உருவாகிக்கொண்டிருந்த தருணத்தில். இவ்வாறு, இந்த இந்தியன் வங்கியின் வரலாறு இப்போது மூன்று நூற்றாண்டுகளாக பரவியுள்ளது.
இந்த பெருமைவாய்ந்த இந்தியன் வங்கியில் தான் (Indian Bank) தற்போது ஆலோசகர் (Consultant) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது 09.01.2024 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கியில் (Indian Bank) ஆலோசகர் (Consultant) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஆலோசகர் (Consultant) பணியிடத்துக்கான கல்வி தகுதி:
அரசு அல்லது AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ (MBA) பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஆலோசகர் (Consultant) பணியிடத்துக்கான முன்னனுபவம்:
ஆலோசர் (Consultant) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஆலோசகர் (Consultant) பணியிடத்துக்கான வயதுத்தகுதி:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 40 எனவும், அதிகபட்சம் 65 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆலோசகர் (Consultant) பணியிடத்துக்கான சம்பள விவரம்:
இந்த இந்தியன் வங்கியில் ஆலோசகர் பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
தேர்வு முறை:
நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு, குழு விவாதம், சைக்கோமெட்ரிக்ஸ் டெஸ்ட், பிரசன்டேஷன் (Interview, Written Test, Group Discussion, Psychometrics Test, Presentation) ஆகிய தேர்வு முறைகளின் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
ஆலோசகர் (Consultant) பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PwBD பிரிவினர் ரூ.100/- செலுத்தினால் போதுமானது. மற்ற பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000/- செலுத்தவேண்டும்.
ஆலோசகர் (Consultant) பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 09.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு
https://www.indianbank.in/wp-content/uploads/2023/12/Detailed-Advertisement_LD.pdf
ஆகிய இணையதள முகவரிகளை கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












