குறுகிய கால ராணுவ சேவை (SSC) பிரிவின் கீழ் வரும் மிலிட்டரி நர்சிங் சேவை (Military Nursing Service-Nurse) பிரிவில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக இந்திய ராணுவம் (Indian Army) அறிவித்துள்ளது.
இப்பணிக்கு Nursing தேர்ச்சி பெற்ற பெண்களின் விண்ணப்பங்கள் டிசம்பர் 11 முதல் (11.12.2023) பெறப்படவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நர்சிங் பிரிவில் பல்வேறு இடங்கள் காலியாகவுள்ளன. இப்பணிக்கு அரசு அல்லது INC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் B.Sc, PB B.Sc, M.Sc ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.
இந்த ராணுவ துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும் என்பது விதி.

விண்ணப்பதாரர்கள் 25.12.1988 அன்று முதல் 26.12.2002 அன்றுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
இந்த ராணுவ Nursing பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு MNS விதிமுறைப்படி மாத ஊதியம் தரப்படும்.
இந்தப் பணிக்கு கம்ப்யூட்டர் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு (Computer Based Examination, Interview, Medical Examination) முறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 11.12.2023 அன்று முதல் 26.12.2023 அன்று வரை இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Notification/1069_1_SHORT_SERVICE_COMMISSSIONED_OFFICERS_IN_THE_MILITARY_NURSING_SERVICE__MNS__2023-24.pdf என்ற இணையதள லிங்க்கைக் காணலாம்.
விண்ணப்பங்கள் டவுன்லோடு தொடர்பான விவரங்களுக்கு https://exams.nta.ac.in/SSCMNS என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












