ராணுவத்தில் சேர ஆசையா....! காத்திருக்கும் பணியிடங்கள்...!!!

இந்திய ராணுவம் 55 NCC சிறப்பு நுழைவுத் திட்டம் 56வது பாடநெறி (அக் 2024) குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் (NT) காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.joinindianarmy.nic.in/ இல் 09.01.2024 முதல் 06.02.2024 மாலை 03.00 மணி வரை செயலில் இருக்கும். கூடுதல் விவரங்களுக்கு https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த பெருமைவாய்ந்த இந்திய ராணுவத்தில் என்சிசி பிரிவின் கீழ் தற்போது 55 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கு 55 இடங்களும், பெண்களுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. (NCC Men - 55 (45 for General Category and 05 for Wards of Battle Casualties of Indian Army personnel only) - NCC Women - 05 (04 for General Category and 01 for Wards of Battle Casualties of Indian Army personnel only).

ராணுவத்தில் சேர ஆசையா....! காத்திருக்கும் பணியிடங்கள்...!!!

இந்திய ராணுவப் பணியிடங்களுக்கான வயது வரம்பு:

1 ஜூலை 2024 இன் படி 19 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

இந்திய ராணுவப் பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் முறையே மூன்று/நான்கு ஆண்டுகள் பட்டப் படிப்பின் முதல் இரண்டு/மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். அத்தகைய, மாணவர்கள் நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டால், பட்டப் படிப்பில் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும், தோல்வியுற்றால் அவர்களின் விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.

இந்திய ராணுவப் பணியிடங்களுக்கான சம்பள விவரம்:

Lieutenant - Level 10 - Rs.56,100 - 1,77,500, Captain - Level 10B - Rs.61,300 - 1,93,900, Major- Level 11 - Rs.69,400 - 2,07,200, Lieutenant Colonel - Level 12A - Rs.1,21,200 - 2,12,400, Colonel - Level 13 - Rs.1,30,600 - 2,15,900,

Brigadier - Level 13A - Rs.1,39,600 - 2,17,600, Major General - Level 14 - Rs.1,44,200 - 2,18,200, Lieutenant General HAG Scale -Level 15 - Rs.1,82,200 - 2,24,100, Lieutenant Gen HAG + Scale- Level 16 - Rs.2,05,400 - 2,24,400, VCOAS/Army Commander/ Lieutenant General (NFSG) -Level 17 - Rs.2,25,000/-(fixed), COAS - Level 18 - Rs.2,50,000/-(fixed) ஆகிய பணியிடங்களுக்கு சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பங்களை சரிபார்த்தல், மருத்துவத் தேர்வு, எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு (Shortlisting of Applications,
Medical Examination, SSB Interview) அடிப்படையில் ஆட்கள் இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

குறிப்பிட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனில் 9 ஜனவரி 2024 முதல் 6 பிப்ரவரி 2024 வரை மாலை 3:00 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Army has invited online applications for the NCC SPL Entry 56 Course (Men & Women) Short Service Commission posts on its official website. Interested and eligible candidates can apply online for these posts on or before February 06, 2024. Candidates with requisite educational qualification including degree from any recognised university having age limit from 19 to 25 years have golden chance to apply for this major recruitment drive to become a part of Indian Army.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+