விமானப் படையில் 3,500 இடங்கள் காலி.! உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள்...

இந்திய விமானப்படையில் 'அக்னிவீர்' திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 3,500 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து போதிய தகவல்களைப் பெறலாம்.

இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (IAF, Bhartiya Vāyu Senā) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஓர் அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.
இந்திய வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.
இந்திய வான்படை சுமார் 1,70,000 வீரர்களைக் கொண்டுள்ளது.

விமானப் படையில் 3,500 இடங்கள் காலி.! உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள்...

சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. அண்மைய காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவினமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களே முதற் பெரும் படைத்தலைவர் ஆவார்.
இந்த பெருமைவாய்ந்த இந்திய விமானப் படையின் அக்னிபத் திட்டத்தின் கீழ் தான் தற்போது மொத்தம் 3,500 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய விமானப் படையின் அக்னிவீர் திட்ட பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் கணிதம், இயற்பியல் பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

இந்திய விமானப் படையின் அக்னிவீர் திட்ட பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய 2.1.2004 - 2.7.2007க்குள் பிறந்திருக்க வேண்டும்.

பணிக்காலம்:

இந்தத் திட்டத்தின் விமானப்படையில் சேர்வோர் நான்கு வருடம் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறலாம்.

இந்திய விமானப் படையின் அக்னிவீர் திட்ட பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை:

இந்தப்பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்திய விமானப் படையின் அக்னிவீர் திட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ. 550 செலுத்தவேண்டும்.

கடைசிநாள்:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் வரும் பிப்ரவரி 6-ம் தேதியாகும் (6.2.2024).

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து போதிய தகவல்களைப் பெறலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The IAF Agniveer Vayu Recruitment 2024 will be open to qualified candidates starting on January 17 and running through February 6, 2024, via online application.On January 2, 2024, the IAF announced the openings for the Agniveer selection program. Applications are being accepted for the IAF Agniveer Recruitment 2024 from young men and women between the ages of 17.5 and 21.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+