India Security Press Nashik Recruitment 2022: நாணயங்கள் அச்சிடும் நாசிக் ஆலையில் அரிய வாய்ப்பு…!

இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் பணி

பணத்தாள், நாணயங்களை அச்சிடும் பிரதான பணியை மேற்கொண்டு வரும் இந்திய பாதுகாப்பு அச்சகத்தின் நாசிக் ஆலையில், இளநிலை தொழில்நுட்ப பணியாளர் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,780 ஊதியம் பெற முடியும்.

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம், (Security Printing and Minting Corporation of India Limited)

இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் பணி…!

மேலாண்மை : மத்திய அரசு

காலிப்பணியிடம் எண்ணிக்கை: 85

பணி விவரம்

இளநிலை தொழில்நுட்ப வல்லுநர் ( Junior Technician)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கல்வி தகுதி

தொடர்புடைய துறைகளில், மாநில தொழிற் பயிற்சி குழுமம் (State Council for Vocational Training), மத்திய தொழிற் பயிற்சி குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

தகுதி காண் நிலை காலத்தில் (probation period) குறைந்தபட்சம் ரூ.18,780 முதல் அதிகபட்சம் ரூ.67,390 வரை மாத ஊதியம் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 08.11.2022 அன்று 25க்கு கீழும், 18க்கு மேலும் இருக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியலின வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இருப்பினும், வயது வரம்பில் மற்ற பிரிவினர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சலுகை, தளர்வுகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படித்து அறிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://ispnasik.spmcil.com என்ற இணைய பக்கத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படும்.

தேர்வு உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகள், சலுகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

படிக்க இங்கு கிளிக் ப்ளீஸ்...!

https://ispnasik.spmcil.com/Interface/JobOpenings.aspx?menue=5

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
India Defense Press Nashik Plant, which is mainly engaged in printing of Banknotes and Coins, has issued a recruitment notification for Junior Technician Vacancies. These posts can fetch a minimum salary of Rs.18,780.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+