நீங்க விளையாட்டு வீரரா? வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு..!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நீங்க விளையாட்டு வீரரா? வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு..!

 

நிர்வாகம் : இந்திய வருமான வரித்துறை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம் :

பணி : வருமான வரி ஆய்வாளர்

  • காலிப் பணியிடம் - 01
  • கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • ஊதியம் : மாதம் ரூ.9,300 முதல் ரூ. 34,800 வரையில்

பணி : வரி உதவியாளர்

  • காலிப் பணியிடம் - 18
  • கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் எழுத்துகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : சுருக்கெழுத்தாளர் கிரேடு - II

  • காலிப் பணியிடம் - 08
  • கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்று நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு சுருக்கெழுத்தில் எழுதி அதனை ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகளும், அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 65 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : பல பணி பணியாளர்கள்

  • காலிப் பணியிடம் - 08
  • தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்

விளையாட்டு தகுதி : சம்மந்தப்பட்ட விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு பிரிவுகளை அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

 

தேர்வு முறை : விளையாட்டுத் தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Deputy Commissioner of Income -Tax (Hqrs-Personnel), Room No.378 A, C.R.Building, I.P.Estate, New Delhi - 110 002

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.incometaxindia.gov.in/Lists/Latest%20News/Attachments/302/Advertisemen_MiscComm_11_3_19.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Income Tax Recruitment 2019 Apply Online 35 Job Vacancies: Apply Online!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X