புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : இந்திய வருமான வரித்துறை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம் :
பணி : வருமான வரி ஆய்வாளர்
- காலிப் பணியிடம் - 01
- கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- ஊதியம் : மாதம் ரூ.9,300 முதல் ரூ. 34,800 வரையில்
பணி : வரி உதவியாளர்
- காலிப் பணியிடம் - 18
- கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் எழுத்துகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி : சுருக்கெழுத்தாளர் கிரேடு - II
- காலிப் பணியிடம் - 08
- கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்று நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு சுருக்கெழுத்தில் எழுதி அதனை ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகளும், அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 65 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி : பல பணி பணியாளர்கள்
- காலிப் பணியிடம் - 08
- தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்
விளையாட்டு தகுதி : சம்மந்தப்பட்ட விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு பிரிவுகளை அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முறை : விளையாட்டுத் தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Deputy Commissioner of Income -Tax (Hqrs-Personnel), Room No.378 A, C.R.Building, I.P.Estate, New Delhi - 110 002
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.incometaxindia.gov.in/Lists/Latest%20News/Attachments/302/Advertisemen_MiscComm_11_3_19.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












