நீங்கள் விளையாட்டு வீரரா... வருமான வரித்துறையில் வேலை காலியாக இருக்கு...!!!

வருமான வரித்துறையில் (Income Tax Department) விளையாட்டுப் பிரிவின் (Sports Persons) கீழ் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் ஆஃப் இன்கம் டாக்ஸ், ஸ்டெனோகிராபர், டாக்ஸ் அசிஸ்டெண்ட் (Inspector of Income Tax, Stenographer II, Tax Assistant) போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

கூடுதல் தகவல்களுக்கு https://incometaxmumbai.gov.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தியாவில் வருமான வரித்துறை என்பது, இந்தியா விடுதலை பெற்ற பின்னர் செயல்படத் தொடங்கியது. இதற்காக இந்திய வருமானவரி சட்டம், 1961-ல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 01-04-1962 முதல் இந்திய வருமான வரிச் சட்டம் செயல்படத் தொடங்கியது.

வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசின் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வருமான வரித்துறை ஆனது இந்திய அரசின் நிதி அமைச்சக வருவாய்த்துறையின் நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் இயங்குகிறது.

நீங்கள் விளையாட்டு வீரரா... வருமான வரித்துறையில் வேலை காலியாக இருக்கு...!!!

வருமான வரித் துறையினர்க்கு, வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது, படிவத்தில் நிரந்த கணக்கு எண் (PAN) கட்டாயமாக குறிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இந்திய வருமான வரித் துறையினர், ஒரு நிதியாண்டில் ஒரு தனிநபர் ஈட்டிய மொத்த வருவாய்க்கு ஏற்ப வருமான வரி நிர்ணயித்துள்ளது. 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கும், 80 வயது நிரம்பிய மிக மூத்த குடிமக்களுக்கான வருமான வரி செலுத்துவதில் சிறிது சலுகை காட்டப்பட்டுள்ளது.

இந்த பெருமைமிகு வருமான வரித்துறையின் மும்பை பிரிவு அலுவலகத்தில் தான் தற்போது விளையாட்டுப் பிரிவின் (Sports Persons) கீழ் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் ஆஃப் இன்கம் டாக்ஸ், ஸ்டெனோகிராபர், டாக்ஸ் அசிஸ்டெண்ட் (Inspector of Income Tax, Stenographer II, Tax Assistant) போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்ஸ்பெக்டர் ஆஃப் இன்கம் டாக்ஸ், ஸ்டெனோகிராபர், டாக்ஸ் அசிஸ்டன்ட் என மொத்தம் 291
பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 19(19.01.2024) ஆகும். Inspector of Income Tax பிரிவில் 14 பணியிடங்கள், Stenographer II பிரிவில் 18 பணியிடங்கள்,

Tax Assistant பிரிவில் 119 பணியிடங்கள், Multi Tasking Staff பிரிவில் 137 பணியிடங்கள், Canteen Attendant பிரிவில் 3 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பங்களை அனுப்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
Inspector of Income Tax - Degree, Stenographer II - 12ம் வகுப்பு, Tax Assistant - Degree, Multi Tasking Staff - 10ம் வகுப்பு,
Canteen Attendant - 10ம் வகுப்பு படித்தவராக இருத்தல் அவசியம்.

பணியிடங்களுக்கான வயது வரம்பு:

01.01.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். Inspector of Income Tax - 18 வயது முதல் 30 வயது வரை, Stenographer II - 18 வயது முதல் 27 வயது வரை,

Tax Assistant - 18 வயது முதல் 27 வயது வரை, Multi Tasking Staff - 18 வயது முதல் 25 வயது வரை, Canteen Attendant - 18 வயது முதல் 25 வயது வரை வயதுத்தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

Inspector of Income Tax பணிக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும், Stenographer II / Tax Assistant பணிகளுக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும், Multi Tasking Staff / Canteen Attendant பணிகளுக்கு ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

வருமான வரித்துறை பணியிடங்களுக்கு தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மெரிட் லிஸ்ட் (Merit List) என்னும் தேர்வு முறையின் படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

வருமான வரித்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த வருமான வரித்துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://incometaxmumbai.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 19.1.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

இணையதள முகவரி:

கூடுதல் தகவல்களுக்கு https://incometaxmumbai.gov.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

விளம்பரப் பதிவிறக்கம்:

பணியிடங்கள் அறிவிப்பு தொடர்பான விளம்பரத்தை பதிவிறக்கம் செய்ய https://www.incometaxmumbai.gov.in/pdf/sports-recruitment.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Income Tax Department, Mumbai invites applications to fill 291 vacancies of Inspector, Tax Assistant, MTS, Steno, and Canteen Attendant through Income Tax Sports Quota Recruitment 2023 Notification from 22 December 2023 to 19 January 2024. The candidates who want to get this opportunity can apply through online mode. Before applying, the candidate should read the information given here and the Income Tax Sports Quota Recruitment 2023 official notification issued by the Income Tax Department, Mumbai.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+